Home


“பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் உங்களை வரவேற்கிறது
இந்த வலைதளம் பற்றி: (About this website)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல போட்டித் தேர்வுகளில் (தமிழ் வழி) முக்கிய பாடத்திட்டமாக தமிழ் உள்ளது. அதாவது, ஐம்பது சதவீதம் கேள்விகள் தமிழ் பாடத்திலிருந்து கேட்கப்படுகின்றன. எனவே தமிழ் வழியில் தேர்வு எழுதும் போட்டியாளர்கள் அனைவரும் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்கிறார்கள்.
“அரசுப் பணியாளராக வேண்டும்” என்கிற உங்களது விடாமுயற்சிக்கு, மிகவும் உதவிகரமாக இருக்கும் விதத்தில் “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில், பல மாதிரித் தேர்வுகளை நீங்கள் இலவசமாக பயிற்சி செய்து பயன்பெறலாம். படிப்பதோடு மட்டுமில்லாமல், அதனை தகுந்த முறையில் பயிற்சி செய்ய இந்த வலைதளம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
நீங்கள், உங்கள் கைபேசி அல்லது கணினியின் மூலமாக, இந்த வலைதளத்தில் தேர்வுகளை எழுதிப் பார்க்கலாம். இந்த சேவையை முற்றிலும் இலவசமாகவும், எந்தவித பதிவு செய்தலும் இல்லாமல் “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் உங்களுக்கு வழங்குகிறது.
உங்களது மனம் தளராத முயற்சியுடன், இந்த வலைதள சேவையையும் பயன்படுத்தி, விரைவில் நீங்கள் ஒரு அரசுப் பணியாளராக வாழ்த்துக்கள்.
தேர்வுகள்: (Mock Tests)
“பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் உங்களது பயிற்சிக்காக பல மாதிரித் தேர்வுகளை உருவாக்கி பதிவேற்றியுள்ளது. மேலும், பல புதிய தேர்வுகளையும் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகிறது.
கீழேயுள்ள லிங்க்கை கிளிக் செய்து தேர்வுகளை தேர்ந்தெடுங்கள்.
குறிப்பு: “பொதுத்தமிழ் ஆன்லைன்” இணையதளத்தை பயன்படுத்தும் முன், தயவுசெய்து இந்த வலைதளத்தின் பயன்பாட்டு நிபந்தனைகளை (Terms of Use) கவனமாக படித்து பின்பற்றவும்.
தேர்வுகள் எழுதும் முறை: (Instructions to write mock test)
  • ஒவ்வொரு தேர்வும் 25 வினாக்களை கொண்டுள்ளது. வினாக்கள் அனைத்தும் செய்யுள், இலக்கணம், மொழித்திறன், உரைநடை ஆகிய பகுதிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
  • போட்டித் தேர்வினைப் போலவே, ஒவ்வொரு வினாக்களுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கேள்வியை சரியாக படித்துப்பார்த்து விடையை தேர்வு செய்யவும். தெரியாத கேள்விகளை விட்டுவிடலாம்.
  • தேர்வு பக்கத்தின் கடைசியில் இருக்கும் SUBMIT பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேர்வு முடிவுகளை நொடியில் அறியலாம். மேலும், VIEW ANSWERS பொத்தனை கிளிக் செய்வதன் மூலம் கேள்விகளுக்கான சரியான விடையினை அறிந்துகொள்ளலாம்.
குறிப்பு: உங்களது மதிப்பெண் மற்றும் தேர்வுகள் பற்றிய விபரங்கள் எவையும் இந்த வலைதளத்தில் சேமிக்கப்படாது. மேலும் விபரங்களுக்கு இந்த வலைதளத்தின் தனியுரிமைக் கொள்கையை (Privacy Policy) பார்வையிடவும்
தேர்வு எழுதுபவரின் கவனத்திற்கு: (Important guidelines)
  • “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்தில் உள்ள கேள்விகள், மற்றும் விடைகள் அனைத்தும் மூன்று படிநிலைகளில் சரிபார்க்கப்பட்டு பதிவிடப்படுகிறது.
  • கேள்விகள் மற்றும் அதற்குத் தகுந்த பதில்கள் அனைத்தும், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தினால் வெளியிடப்படும் தமிழ்ப் பாடப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. நீங்கள் உபயோகப்படுத்தும் கையேடுகள் அல்லது வேறு புத்தகங்கள் அல்லது இணையத்தில், கேள்விகளுக்கேற்ற விடைகள் மாறுபட்டிருந்தால் அதனை தகுந்த முறையில் தெளிவுபடுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
  • கேள்விகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு பதிவிடப்பட்டிருந்தாலும், ஒரு சில தவறுகள் எங்கள் பார்வைக்கு புலப்படாமல் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், நீங்கள் எங்களது தவறை மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தவும். அதற்கான வழிமுறைகள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிந்துகொள்ள, Contact பக்கத்தை பார்வையிடவும்.
  • இந்த வலைதள சேவையை பயிற்சி செய்ய மட்டுமே பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. “இதில் உள்ள வினாக்களை மட்டும் படித்து தேர்வில் வெற்றிபெற முடியும்” என்பது போன்ற எந்த வாக்குறுதியையும் “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் உங்களுக்கு வழங்காது. மேலும் அதற்கான எந்தப் பொறுப்பையும், “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் ஏற்றுக்கொள்ளாது.
  • தேர்வு எழுதுபவர்கள், மேற்கண்ட நிபந்தகளை கவனமாக படித்து பின்பற்றவும். எங்கள் வலைதளத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி, தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.