Terms of use
“பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்தை பயன்படுத்தும் முன் இந்த வலைதளத்தின் பயன்பாட்டு நிபந்தனைகளை முழுமையாக படித்து தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
1. “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதள சேவை முற்றிலும் இலவசமாக, போட்டித் தேர்வாளர்கள் பயிற்சி செய்து பயன்பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. இதனை எந்தவொரு நபர் அல்லது நிறுவனமும் வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்த அனுமதியில்லை.
2. இந்த வலைதளத்தின் எந்தவொரு பக்கத்தின் முகவரியையும் (URL) உங்களது நண்பர்களுக்கு இணையதளம், சமூக வலைதளம் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் பகிர்ந்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
3. தரவு பாதுகாப்பு கருதி இந்த வலைதள பக்கத்தை அச்சிடும் முறையானது முடக்கப்பட்டுள்ளது. அதனை மீறி எந்தவொரு தேர்வையும் அச்சிட்டோ அல்லது PDF வடிவிலோ விற்பனை செய்ய எந்தவொரு நபர் அல்லது நிறுவனத்திற்கு அனுமதியில்லை.
4. பயிற்சி நிறுவனங்கள், தங்களது மாணவர்களுக்கு இலவச பயிற்சியளிக்க “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்தை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
5. இந்த தளத்தில் உள்ள கேள்வி மற்றும் பதில்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம். மேலும் தொழிற்நுட்ப கோளாறுகள், பிற புகார்கள் மற்றும் மேம்பாட்டு வழிமுறைகளையும் தெரியப்படுத்தலாம். அதற்கான வழிமுறைகளை அறிய எங்களது “Contact” பக்கத்தை பார்வையிடவும்.
6. இந்த வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள வினா விடைகளை எந்தவொரு மாற்றமும் செய்யாமல் பிற இணையதளங்கள், மொபைல் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட அனுமதி இல்லை.
7. இந்த வலைதளத்தின் மூல நிரல்கள் (Source Code) அனைத்தும், “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்திற்கு மட்டுமே உரியது. இதனை மாற்றங்கள் செய்து பிற இணையதளங்களில் பயன்படுத்த அனுமதி இல்லை.
8. இந்த வலைதளத்தை பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் எங்களது தனியுரிமைக் கொள்கையை (Privacy Policy) படித்து பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
9. விளம்பரங்கள்:
9.1. இந்த வலைதளத்தின் விளம்பரங்கள் காட்டப்படுவதன் காரணங்கள்:
- “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் முற்றிலும் இலவசமாக போட்டித் தேர்வாளர்கள் பயிற்சி பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மாதிரித் தேர்வுகள் முழுவதும் “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதள நிர்வாகியின் மூலம் தொகுக்கப்படுகிறது மற்றும் “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்திற்கு உரிமையில்லாத பிறரிடமிருந்து வாங்கப்படுகிறது.
- இந்த வலைதளத்தின் தேர்வுகள் எவையும் எந்தவொரு பயிற்சி நிறுவனத்தின் விளம்பரத்திற்கோ அல்லது தனிமனிதரின் விளம்பரத்திற்கோ உருவாக்கப்படவில்லை. இந்த வலைதளத்தின் முக்கிய நோக்கம், தரமான பயிற்சித் தேர்வுகளை இலவசமாக அனைவருக்கும் வழங்குவதாகும்.
- எனவே, தரமான தேர்வுகளைத் தயாரிக்கும் பணிக்கான ஊதியம், இணைய சேவைக் கட்டணம், மின்சாரம் மற்றும் இதர மின்னணு சாதன பராமரிப்புச் செலவுகளை, பயனர்களிடம் இருந்து நேரடியாக எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், விளம்பரங்கள் மூலமாக மறைமுகமாக பெற்றுக்கொள்ளவே இந்த வலைதளத்தில் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.
9.2 இந்த வலைதளத்தில் காட்டப்படும் விளம்பரங்கள் அனைத்தும் பிரபல விளம்பர வலைதளங்களின் மூலம் காட்டப்படுகிறது. எனவே, விளம்பரங்கள் பற்றிய எந்தவொரு புகார் அல்லது ஆலோசனைகளை “பொதுத்தமிழ் ஆன்லைன்” நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாது.
9.3 விளம்பரங்கள் பற்றிய தனியுரிமைக் கொள்கைகளை அறிந்துகொள்ள, இந்த வலைதளத்தின் தனியுரிமைக் கொள்கை (Privacy Policy) பக்கத்தை பார்வையிடவும்.
10. மேற்கண்ட விதிமுறைகளை எந்த நேரத்திலும் மாற்றம் செய்யவும், புதிய விதிமுறைகளை சேர்க்கவும் “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்திற்கு உரிமை உண்டு.
“பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்தின் பயன்பாட்டு நிபந்தனைகளை படித்ததற்கு நன்றி.
தனியுரிமைக் கொள்கைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.