Privacy
“பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்தை பயன்படுத்தும் முன் இந்த வலைதளத்தின் தனியுரிமைக் கொள்கைகளை (Privacy Policy) முழுமையாக படித்து தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
1. “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்தை பயன்படுத்தும் பயனர்கள் எந்தவித பதிவு (Registration) செய்தலும் இல்லாமல் இந்த வலைதள சேவையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, இந்த வலைதளத்தை பயன்படுத்த உங்களது தனிப்பட்ட விபரங்கள் (உதாரணம்: பெயர், மின்னஞ்சல் முகவரி, இன்னும் பிற..) எவற்றையும் பயன்படுத்த தேவையில்லை.
2. நீங்கள் உங்களது புகார்கள் மற்றும் கருத்துக்களை மின்னஞ்சல் செய்யும்போது உங்களது மின்னஞ்சல் முகவரி எங்களது மின்னஞ்சல் சேவையகத்தில் சேமிக்கப்படும். உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டபின் அல்லது நிராகரிக்கப்பட்டபின் அவை சேவையகத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படும்.
குக்கிக்கள் (Cookies) என்பவை நீங்கள் இந்த வலைதளத்தை பார்வையிடும்போது, நீங்கள் பயன்படுத்தும் இணைய உலாவியால் (Web Browser) உங்களது சாதனத்தின் நினைவகத்தில் சேமிக்கப்படும் சிறு நிரல் கோப்பாகும்.
“பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம், ஒரு சிறு குக்கி கோப்பை உங்கள் சாதனத்தில் சேமிக்கிறது.
- வலைதளத்தில் உங்களது தேடல் விருப்பங்களை நினைவில் வைத்துக்கொள்ள
- உங்களுக்கு பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட
மேற்கண்ட காரணங்களுக்காக மட்டும் பொதுத்தமிழ் ஆன்லைன் வலைதளம் குக்கிக்களை சேமிக்கிறது.
குறிப்பு: இந்த தளத்தில் காட்டப்படும் விளம்பரங்களின் சேவையகம், அதற்கென ஒரு குக்கி கோப்பை பயன்படுத்துகிறது. அதைப் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
“பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்தின் பெயரில் உங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் அல்லது கைபேசி குறுந்தகவல்கள் மூலமாவோ அல்லது “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் தவிர்த்த வேறு இணையத்தில் காட்டப்படும் Landing Page மூலமாகவோ எவரும் உங்களது தனிப்பட்ட தகவல்களை தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். அதுபோன்ற எந்த தகவலையும் “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலமாக ஒருபோதும் கேட்பதில்லை. எனவே உங்களுக்கு கிடைக்கும் அதுபோன்ற போலியான மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களை நிராகரிக்கவும்.
“பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் தங்கள் பயனர்களிடம் இருந்து எந்தவொரு நன்கொடையையும் கேட்பதில்லை. எனவே நன்கொடைகள் பற்றி உங்களுக்கு கிடைக்கும் போலியான மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களை நிராகரிக்கவும்.
இந்த வலைதளம் தொடர்பான அப்டேட்டுகள் மற்றும் பிற விபரங்கள் அனைத்தும், வலைதளத்தின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்கள் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். ஆகையால், எங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை மட்டும் பின்தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறது. வேறு இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் பரப்பப்படும் எந்தவொரு போலியான தகவலுக்கும் “பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளம் பொறுப்பாகாது.
“பொதுத்தமிழ் ஆன்லைன்” வலைதளத்தின் தனியுரிமைக் கொள்கைகளை படித்ததற்கு நன்றி.
பயன்பாட்டு நிபந்தனைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.